August 9, 2018
தண்டோரா குழு
கேரளா,கர்நாடகாவில் கனமழை பெய்வதால் காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுக்க மத்திய நீர்வள ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கர்நடாகா மற்றும் கேரள மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது.இதனால் அணைகளில் உபரி நீர் அதிகமாக வெளியேற்றப்பட்டு வருகிறது.கர்நாடகாவின் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளது.வினாடிக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான உபரி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.இந்த நீர் இரண்டு நாட்களில் மேட்டூருக்கு வரும் என தெரிகிறது.
இதையடுத்து கிருஷ்ணகிரி,தருமபுரி,சேலம்,ஈரோடு,திருச்சி,தஞ்சை ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்குமாறு மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதைபோல், முன்னேற்பாடுகளை செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.மேலும்,2 நாட்களுக்குள் மேட்டூருக்கான நீர்வரத்து 1 லட்சம் கனஅடிக்கு மேல் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.