• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் +2 தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி

May 16, 2018 தண்டோரா குழு

தமிழகம் முழுவதும் இன்று +2 தேர்வுகள் வெளியானது.இந்த ஆண்டு பொதுத் தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 87.7% மாணவர்களும், 94.1% மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர்

தேர்வு முடிவுகள் குறித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,

இந்த ஆண்டு பொதுத் தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 87.7% மாணவர்களும், 94.1% மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.இந்த ஆண்டும் மாணவிகளே, மாணவர்களை விட அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

4,847 மாணவ, மாணவிகள் 1151 முதல் 1180 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். 8,510 மாணவ, மாணவிகள் 1126 முதல் 1150 மதிபெண்கள் பெற்றுள்ளனர். 71,368 மாணவ,மாணவிகள் 1001 முதல் 1100 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர் 1,07,266 மாணவ,மாணவிகள் 901-1000 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர் 1,65,425 மாணவ,மாணவிகள் 701 முதல் 800 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர் 700 மதிப்பெண்களுக்கு கீழ் 8,60,434 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி விகிதம் அடிப்படையில் 97 சதவீதம் தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 96.3 சதவீதத்துடன் ஈரோடு மாவட்டம் 2வது இடத்திலும், 96.1 சதவீதத்துடன் திருப்பூர் மாவட்டம் 3வது இடத்திலும் உள்ளன.

மேலும்,பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 238 ஆகவும், ஜூன் 25 ஆம் தேதி பிளஸ் 2 மறுதேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பாட வாரியாக தேர்ச்சி விகிதம்:

இயற்பியல்- 96.4%
வேதியியல்- 95.0%
கணிதம்- 96.1%
உயிரியியல்- 96.34
விலங்கியல்- 91.9%
தாவரவியல்- 93.9%
வணிகவியல்- 90.30%
கணக்குபதிவியல்- 91%
கணினி அறிவியல்- 96.1%

மேலும் படிக்க