October 8, 2018
தண்டோரா குழு
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த இரண்டு மணி நேரமாக செயல்படாமல் இருந்த `108′ அவசர எண் தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது.விபத்து மற்றும் மருத்துவ அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் சேவைக்கான அழைப்பு எண் 108 உள்ளது.அவசர சிகிச்சை எண்ணான `108′ சேவை மையம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வரும் அழைப்புகள் இங்கு வந்த பின்னர் தான் சம்பந்தப்பட்ட மாவட்டத்துக்கு மாற்றப்படும்.
இதற்கிடையில் பி.எஸ்.என்.எல்.,தொலைத் தொடர்பு பாதிக்கப்பட்டதால்,108 அழைப்புக்கான சேவை பிற்பகலில் சுமார் ஒரு மணி நேரதற்கு மேலாக முடங்கியதாக சேவை மையத் தலைமையகம் அறிவித்தது.எனவே மருத்துவ ஆம்புலன்ஸ் சேவைக்கு 108 என்ற எண்ணுக்கு பதில்,தற்காலிகமாக அழைப்பதற்காக மற்றொரு எண்ணையும் அறிவித்திருந்தது.இந்நிலையில், 108 அழைப்பு சேவை மீண்டும் சீராகிவிட்டதால், தற்காலிக எண்ணுக்கு அழைக்க வேண்டாம் என அதன் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.