October 8, 2018
தண்டோரா குழு
தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் மாற்று எண் அறிவிக்கப்பட்டுள்ளது.பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 108 அவசர ஊர்தி எண் சேவை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.அதற்கு மாற்று எண்ணாக 044-40170100 என்ற எண்ணை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த பிரச்சனை தற்காலிகமானது தான் விரைவில் இது சரிசெய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுவரை இந்த மாற்று எண்ணை உபயோகிக்க அறிவுரைப்படுத்தப்பட்டுள்ளது.