August 4, 2018
தண்டோரா குழு
மருத்துவர்கள் அல்லது செவிலியர்கள் துணையின்றி வீடியோ பார்த்து பிரசவம் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் என தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க எம்பிபிஎஸ் படித்த மருத்துவர்கள்,மகப்பேறு பயிற்சி பேட்டர செவிலியர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள் என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் அரசு மருத்துவமனையின் தாய் நல சேவைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.தாய்சேய் நலனை காக்கும் கடமையை நிறைவேற்ற விடாமல் தடுப்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
மேலும்,வீட்டில் பிரசவம் பார்ப்போர் மீது 102, 104, எண்களுக்கு பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டு அறைக்கும்,இது தவிர 044-24350496 / 044-24334811 மற்றும் 9444340496இல் புகாரளிக்கலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.