• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளத்திலிருந்து முட்டை, கோழிகள் கொண்டுவர தமிழக அரசு தடை

November 5, 2016 தண்டோரா குழு

பறவைக் காய்ச்சல் தமிழகத்திற்குப் பரவாமல் தடுப்பதற்காக கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு முட்டை மற்றும் கோழிகள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. நோயைத் தடுக்க கேரள அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்திற்குப் பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து கேரளத்திலிருந்து வரும் வாகனங்களில் பறவைக் காய்ச்சல் தடுப்பு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.

நெல்லை மாவட்டம் புளியரையில் பறவைக் காய்ச்சல் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு, கால்நடை மருத்துவர்கள், ஊழியர்கள் முகாமிட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை, புளியரையில் உள்ள முகாமைத் தமிழக கால்நடை பராமரிப்புத் துறை கூடுதல் இயக்குநர் சக்திவேல் ஆய்வு செய்தார். அந்த வழியாக வந்த சில கேரள வாகனங்களில் அவரும் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழகத்தில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுவதுடன், வாகனங்களின் டயர்கள் உள்ளிட்ட அனைத்துப் பாகங்களிலும் பறவைக் காய்ச்சல் நோய்த் தடுப்பு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக தமிழக – கேரள எல்லையில் 16 இடங்களில் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளத்திலிருந்து கோழிகள், முட்டைகள் கொண்டு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்தக் காரணத்திற்காகவும் அவற்றைத் தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்று முகாமில் உள்ள அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவ வாய்ப்பு இல்லை. அந்த அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது என்றார் கூடுதல் இயக்குநர் சக்திவேல்.

மேலும் படிக்க