August 9, 2018
தண்டோரா குழு
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக தகில் ரமணி வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி பதவியேற்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி,ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வினித் சரண்,உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.எம்.ஜோசப் ஆகிய மூவரையும் கொலீஜியம் பரிந்துரைகளின்படி உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றிக் கொண்டிருந்த விஜயா கமலேஷ் தஹில் ரமணி,தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்பட இருக்கிறார்.
இதனையடுத்து அவர் புதிய தலைமை நீதிபதியாக வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.மேலும்,சென்னை உயர்நீதிமன்றத்தின் 3-வது தலைமை பெண் நீதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.