• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு

December 15, 2016 தண்டோரா குழு

நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றக் கோரி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது குறித்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது; நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளுக்கும், பார்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. மேலும் அங்குள்ள மதுக்கடைகளின் உரிமத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31-க்குப் பிறகு நீட்டிக்கக் கூடாது.

மதுக்கடைகளால் வரித்துறையினர், வரித்துறை அமைச்சர் மற்றும் மாநில அரசும் பணத்தை ஈட்டுவதில் மகிழ்ச்சியாக இருப்பதைக் காண முடிகிறது. இதனால் ஒருவர் உயிரிழந்தால் ரூ.1.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது அவ்வளவுதான்.

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இருப்பதால் ஆண்டுக்கு 1.5 லட்சம் மக்கள் உயிரிழக்கும் நிலையில், பொதுமக்களின் நலனுக்கு உரிய நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.

பல மாநிலங்களில் சாலையோரங்களில் மதுக்கடைகள் அகற்றப்படாததால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் அதிகரிக்கிறது. நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அமைத்து மது விற்பதற்கு ஏற்கத்தக்க காரணம் எதையுமே மாநில அரசுகளால் சொல்ல முடியாது.

இவ்வாறு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் படிக்க