• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரம் மாற்றம்

October 31, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரம் மாற்றம் செய்யப்பட்டு காலையில் ஒரு மணி நேரம் இரவு ஒரு மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 6-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இதற்கிடையில்,சுற்றுசூழல் பிரச்னைகளை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதற்கு தடை செய்யவேண்டும் எனக்கூறி சுற்றுசூழல் ஆர்வலர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்கில்,நாடு முழுவதும் பட்டாசு தயாரிப்பதற்கும் மற்றும் விற்பனைக்கும் முழுமையாகத் தடை விதிக்க முடியாது.பட்டாசு தொழிலை நம்பி 8 லட்சத்திற்கும் அதிகமாக குடும்பங்கள் உள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க முடியாது என்று இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்கவோ, தயாரிக்கவோ தடை இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதேசமயம்,பட்டாசுகளை தயாரிக்கவும் வெடிக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.குறிப்பாக தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம்,கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இரவு 11.30 மணி முதல் இரவு 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என நிபந்தனை விதிக்கப்பட்டது.மேலும்,பட்டாசு தயாரிக்கவும்,விற்பனை செய்யவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதையடுத்து,பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும் அந்த நேரத்தை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில்,இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது தீபாவளி அன்று காலை ஒரு மணி நேரமும்,மாலை ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி காலை 4 மணி முதல் 5 மணி வரையும்,இரவில் 9 மணி முதல் 10 வரை பட்டாசு வெடிக்கலாம் என்றும் இந்த உத்தரவு தமிழகம்,ஆந்திரம்,புதுவை,கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க