January 23, 2018
தண்டோரா குழு
மறைந்த இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் 121வது பிறந்தநாள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்தியா ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழ் இருந்தபோது, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 121-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
கடந்த 1897ம் ஆண்டு, ஜனவரி 23ம் தேதி, ஒரிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் பிறந்தார்.காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்த அவர்,1922ம் ஆண்டு, ஸ்வராஜ் கட்சியை தொடங்கினார்.அவருடைய தேசபற்று இந்திய நாட்டில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜெய் ஹிந்த்’ என்ற அவருடைய முழக்கம் இன்றும் கூட ஒலிக்கிறது.
சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி,தனது ட்விட்டரில், ஒரு நிமிட காணொளியுடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில் “சுபாஷ் சந்திர போஸின் வீரம் ஒவ்வொரு இந்தியனையும் பெருமைபடுத்துகிறது. இந்த பெரும் தலைவருக்கு தலை வணங்குகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும்,சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு,பா.ஜ.க கட்சி தலைவர் அமித் ஷா, ஆகிய தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.