• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சைபீரியா கடற்கரையில் தோன்றிய இராட்சத பனிப்பந்துகள்

November 9, 2016 தண்டோரா குழு

சைபீரியா நாட்டின் கடற்கரையில் திடீரென தோன்றிய ராட்சதப் பனிப்பந்துகளால் அப்பகுதி மக்கள் வியப்படைந்துள்ளனர்.

வடமேற்கு சைபீரியவின் “ஒப்” வளைகுடா கடற்பகுதியில் ஆயிரக்கணக்கான பனிப் பந்துகள் சுமார் 18 கிலோமீட்டர் தூரம் வரை பரவியிருந்தன. அதைப் பார்த்த உள்ளூர் மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒவ்வொரு பனிக்கட்டிகள்தான் பந்துகளைப் போல் உருண்டையாகிக் காணப்பட்டன.

அந்தக் கடற்கரையில் பனிப்பந்துகள் ஒரு மீட்டர் விட்டமுள்ள டென்னிஸ் பந்துகளைப் போல இருந்தன.

ஆர்க்டிக் வட்டத்தின் மேலே அமைந்துள்ள யாமல் தீபகற்பத்தில் உள்ள நைய்டா கிராமத்தை ஒட்டிய கடல் பகுதியில்தான் இவை காணப்பட்டன. அங்கு வசிப்பவர்கள் “இதைப் போல் பனிப்பந்துகளை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை” என்று குறிப்பிட்டனர்.

ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் ஆராய்ச்சி நிறுவனம் செய்திச் செயலர் செர்கி லிசென்கோவ், “பொதுவாக முதலில் சிறிய பனிக்கட்டிகளாக இருக்கும். இதுதான் இயற்பியல் விதி. இப்பனிக்கட்டிகள் நீரினாலும் காற்றினாலும் உருட்டப்பட்டு, உருண்டு உருண்டு மிகப் பெரிய பனிப் பந்துகளாக, உருவம் பெறுகின்றன” என்றார்.

தொடக்கத்தில் சேறு போல உருவாகும் பனிக்குழம்பு தட்பவெப்பம், காற்றின் நிலைமை காரணமாகப் பனிப் பந்துகளாகும்.இதே போன்ற ஒரு அதிசய சம்பவம் 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் ஃபின்லாந்து வளைகுடாவிலும், 2015 ஆம் ஆண்டு டிசம்பரில் மிச்சிகன் ஏரியிலும் காணப்பட்டது.இந்த அபூர்வ பனிக்கட்டிகளின் படங்கள் ரஷ்ய மக்களை அதிகமாக ஈர்த்துள்ளன.

“பார்த்துக் கொண்டேயிருங்கள். இந்தப் பனிப் பந்துகள் முட்டைகளைப் போல் பொரிந்து அவற்றலிருந்து தொல் பழங்காலத்தில் வசித்த விநோத விலங்குகள் பிறக்கப் போகின்றன” என்று நகைச்சுவையாகக் கூறினார் “டி ஜெர்னல்” வலைதளத்தின் வாசகர் ஆன்டன் ஆன்டனோவ் நகைச்சுவையாகக் கூறினார்.

மேலும் படிக்க