• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“STOP DRUG ABUSE”– கண்ணை கவர்ந்த மாணவிகளின் உலகச் சாதனை முயற்சி!

September 1, 2025 தண்டோரா குழு

கோவையில் போதைப்பொருள் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்,கோவை பார்க் இன்ஸ்டிடியூஷன்ஸ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி வளாகத்தில், ஃபேஷன் ஆர்ட் இன்ஸ்டிடியூட் ஃபார் கிரியேட்டிவ் ஸ்கில்ஸ் மற்றும் பார்க் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ் இணைந்து, “STOP DRUG ABUSE” என்ற தலைப்பில் உலகச் சாதனை முயற்சி நடைபெற்றது.

காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வில், 500க்கும் மேற்பட்ட பெண்மணிகள் இணைந்து “போதையில்லா தமிழ்நாடு” உருவாக்க உறுதிமொழி ஏற்று ரேம்ப் வாக்கில் கலந்து கொண்டனர் உலகச் சாதனைப் பதிவாக அமைந்த இந்த முயற்சி, மாணவர்கள் மற்றும் இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விலக்கி, போதையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது.

இதில்,வண்ண உடைகளால் அலங்கரிக்கப்பட்ட மனைவிகள் ரேம்ப் வாக் நடந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

கௌரவ விருந்தினர்களாக டாக்டர். அனுஷா ரவி (CEO, Park Institutions),டாக்டர். காயத்ரி நடராஜன் (Apollo Ivory Dental)
இரா. ரமா ராஜேஷ் (Hey Taya Art Gallery, Inner Wheel President, Tiruppur),டாக்டர். சுரேகா குமார் (Founder, Womens Health Care & German Consultancy Service) உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியின் நிறைவில், World Records Union சார்பில் இந்த சாதனை அங்கீகரிக்கப்பட்டு, பங்கேற்பாளர்களுக்கு விருது மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க