• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம், பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

December 6, 2016 தண்டோரா குழு

முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி டிசம்பர் 6ம் தேதி முதல் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு சார்பில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை (5ம் தேதி) இரவு 11.30 மணிக்குக் காலமானார் என்பதைத் தமிழக அரசு மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது. இதையொட்டி 6ம் தேதி முதல் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைப்பிடிக்கப்படும்.

இந்த நாட்களில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் இந்த 7 நாட்களும் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழக சார்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க