September 29, 2016
தண்டோரா குழு
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக – தமிழகம் இரு மாநிலங்களுகிடையே சுமுகமான தீர்வு ஏற்படததால் 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள கால வரம்பிற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.மேலும், உச்ச நீதிமன்றம் அளித்த 4 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வகையில், அதற்கான பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.