August 6, 2018
காவிரி மருத்துவமனையில் இருந்து திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின், கனிமொழி புறப்பட்டு சென்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், காவிரி மருத்துவமனையில் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, 24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் இருந்தால் மட்டுமே கூற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் காவிரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.இந்நிலையில் தற்போது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர். இதனால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.