• Download mobile app
21 Oct 2025, TuesdayEdition - 3541
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேஸ்புக் கனவைத் தவிடு பொடியாக்கிய ஸ்பேஸ் எக்ஸ் செயற்கைக்கோள்

September 2, 2016 தண்டோரா குழு

உலகம் முழுவதும் இணையதள வசதியை வழங்கும் பேஸ்புக்கின் திட்டம் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெடித்து சிதறியதால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் ஒரே சமூக வலைத்தளம் பேஸ்புக் தான். இதன் நிறுவனர் மார்க் ஜுகும்பேர் இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக ஆப்ரிக்க கண்டத்தின் 14 நாடுகளில் இணையதள இணைப்பை மேம்படுத்துவதற்காக ஒரு திட்டத்தை மேற்கொண்டார்.இதற்காக 200 மில்லியன் டாலர் மதிப்பில் செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கியது பேஸ்புக் நிறுவனம்.

ஆமோஸ்-6 என்ற அந்தச் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்புவதற்காக, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள ‘கேப்கனவெரல்’ மையத்தில் இருந்து ஸ்பேஸ்-எக்ஸ்ஸின் பால்கான்-9 என்னும் ராக்கெட்டின் மூலம் நாளை (சனிக்கிழமை) விண்ணில் செலுத்துவதற்கான பரிசோதனைகள் நேற்று நடந்து கொண்டிருந்தன.இந்தநிலையில்,யாரும் எதிர்பாராத வகையில் அந்த ராக்கெட் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதற தொடங்கியது.

அந்த விபத்தில் அந்த ராக்கெட்டுடன் பேஸ்புக்கில் இருந்த 6 செயற்கைக்கோள்களும் முற்றிலுமாக அழிந்தது.

தற்போது ஆப்ரிக்கா நாட்டில் இருக்கும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகும்பேர் இந்தச் சோக செய்தியைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதில், ஸ்பேஸ்எக்ஸ், பால்கன் 9 ஏவுகணை சோதனை தோல்வியடைந்தது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், பல விதமான மக்களுக்குப் பலனளிக்கக்கூடிய இத்திட்டம் தோல்வியடைந்தது ஏமாற்றமளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், பேஸ்புக்கின் மற்ற தொழில்நுட்ப திட்டமான ‘அக்யூலா’ மூலம் தங்களின் இலக்கை அடையும் வரை தொடர்ந்து பணி செய்வோம் என ஜுகும்பேர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க