• Download mobile app
13 May 2024, MondayEdition - 3015
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நம்மை விட்டுச் சென்றது தனி மனிதரல்ல, சகாப்தம் – நாசர்

December 6, 2016 தண்டோரா குழு

உடல்நலக் குறைவால் உயிரிழந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்குகத் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், கார்த்தி, பொன் வண்ணன் சத்யராஜ் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் நாசர் வெளியிட்ட இரங்கல் கடிதம் வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

“நம்மை விட்டு சென்றது ஒரு தனி மனிதர் அல்ல சகாப்தம் முடிந்திருக்கிறது. ஒரு சரித்திரம் முடிந்திருக்கிறது. ஒரு நடனமணியாக , ஒரு நடிகராக, ஒரு கட்சியின் தலைவராக, அரசின் தலைமையாக அவர் கால் வைத்த எல்லாத் துறைகளிலும் உச்சாணியைத் தொட்டிருக்கிறார். பல்லாண்டு காலம் அடிமைப்பட்டிருந்த பெண் இனத்தில் ஒரு பெண் நினைத்தால், தைரியத்துடன் முன் சென்றால் எந்த அளவிற்கு வெல்லலாம் என்பதற்கு முன் உதாரணமாக இருக்கிறார்.

எங்கள் நடிகர் சமூகத்திற்கு ஒரு மரகத மணி போல் அவர் ஒலித்துக் கொண்டிருக்கிறார். எங்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினராக இருந்திருக்கிறார்.

எங்கள் சங்கத்தின் பால் ,மிக அக்கறை கொண்டு இருந்திருக்கிறார். அவருடைய சக்தி, அவருடைய செயல் எங்களை முன்னெடுத்துச் செல்லும். இந்தத் தருணத்தில் அவரைப் பிரிந்து வாடும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நடிகர் சமூகத்தின் சார்பாகவும், எங்கள் திரையுலகத்தின் சார்பாகவும் எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்”.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க