December 28, 2017
தண்டோரா குழு
கோவாவில் சோனியா காந்தி சைக்கிள்ஓட்டும் காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த சோனியா காந்தி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவரது மகன் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பெற்றுக்கொண்டார். இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் நிகழ்ச்சிகளில் சோனியா காந்தி கலந்துகொள்ளவில்லை.
இதற்கிடையில், சோனியா காந்தி கோவாவில் ஓய்வு எடுத்து வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. கோவாவில் சோனியா காந்தி சைக்கிள் ஓட்டும் காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன.கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்து கடந்த 26-ஆம் தேதி கோவா சென்ற சோனியா காந்தி, ஜனவரி முதல் வாரத்தில் டெல்லி திரும்பவுள்ளதாகக் கூறப்படுகிறது.