• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்மார்ட் சிட்டி உருவாக்குவதைப் போல ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்க வேண்டும்: சச்சின்

December 22, 2017 தண்டோரா குழு

ஸ்மார்ட் சிட்டி உருவாக்குவதைப் போல ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் நேற்று மாநிலங்களவையில்பேச முற்பட்டார், அப்போது, மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு வெளியிட்ட பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் முதல் முறையாக பேச முயன்ற டெண்டுல்கரால் உரையாற்ற முடியாமல் போனது.இதையடுத்து, மாநிலங்களவையில் பேசமுடியாததை சச்சின் தனது முகநூல் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.அதில், வடகிழக்கு இந்தியாவில் விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகமாக இருக்கிறது. ஆரோக்கியமான மற்றும் உறுதியான இந்தியாவை உருவாக்குவதே தனது கனவு. வறுமை, சுகாதாரம், உணவு பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி உருவாக்குவதைப் போல ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், பள்ளிகளில் விளையாட்டை ஒரு பாடமாக்க வேண்டும் என்றும் விளையாட்டை விரும்பும் நாடாக இருக்கும் இந்தியாவை ‘விளையாடும்’ நாடாக மாற்ற வேண்டும் என்றும் சச்சின் கூறி உள்ளார்.

மேலும் படிக்க