October 10, 2018
தண்டோரா குழு
சென்னை வண்டலூர் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள அனு என்கிற 10வயது வெள்ளை நிற புலியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் சிவர்கார்த்திகேயன்.இவர் கடைசியாக நடித்து வெளியான படம் சீமராஜா.இப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில்,சிவகார்த்திகேயன் சென்னை வண்டலூர் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள அனு என்கிற 10வயது வெள்ளை நிற புலியை தத்தெடுத்துள்ளார்.
இதுகுறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
“இந்தியாவில் 1952-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2ம் தேதி முதல் 8ம் தேதி முடிய மக்களுக்கு வன உயரினங்களை பாதுகாத்தல் மற்றும் பேணுதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வன உயிரின வார விழா கொண்டாடப்படுகிறது.வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்கும் திட்டம் 2009ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.புலி மற்றும் சிங்கத்தின் உணவுக்காக நாளொன்றுக்கு ரூ.1196.68 செலவாகும்.இதே போன்று இதர விலங்குகளுக்கு அதன் உணவிற்கேற்ப நாளொன்றிற்கான செலவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வன உயிரினங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் அனு என்ற பெண் வெள்ளைப் புலியை 6 மாதத்திற்கு தத்தெடுத்துள்ளார்”.