• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்க அதிபரை அறிவே இல்லாத தத்தி முண்டம் என்று திட்டிய சித்தார்த்

December 30, 2017 தண்டோரா குழு

டுவிட்டரில் கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை நடிகர் சித்தார்த் டுவிட்டரில் திட்டித் தீர்த்துள்ளார்.

தமிழ் தெலுங்கு என இரு மொழி படங்களில் முன்னணி நடிகாராக இருப்பவர் நடிகர் சித்தார்த். சமீபத்தில் இவரது நடிப்பில் வந்த அவள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது சினிமா மட்டுமின்றி தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும் விமர்சனம் செய்து வருகிறார். 2ஜி வழக்கு தொடர்பாக இவர் பதிவிட்டிருந்த டுவிட்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பனிப்பொழிவு அதிகமான பாதிப்பை ஏற்படுத்துவதால், குளோபல் வார்மிங்கை பல டிரில்லியன் டாலர்கள் செலவழித்து தடுக்காமல் இருந்தால்,நன்றாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு நடிகர் சித்தார்த், அறிவே இல்லாத தத்தி முண்டம் என்று திட்டி கருத்து தெரிவித்து தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க