2ஜி வழக்கு தீர்ப்பு குறித்து நடிகர் சித்தார்த் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து உள்ளார்.
நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. இந்த தீர்ப்பு குறிப்பு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருக்கின்றனர். அதைப்போல் சமூகவலைத்தளங்களில் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், “ராஜா, கனிமொழி நடிப்பில் திருட்டுப்பயலே-1 படத்துக்கான விமர்சனம் இன்று வெளியாகிறது. ஜெயலலிதா, சசிகலா மற்றும் குழுவினர் நடிப்பிலான திருட்டுப்பயலே-2 போலவே இந்த படத்துக்கான தீர்ப்பும் நன்றாகவே இருக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று தெரிவித்திருந்தார்.
பின்னர் இந்த ட்வீட் சர்ச்சையை கிளப்பியத்தை தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்தை அவர் தனது ட்விட்டர் தளத்திலிருந்து நீக்கினார்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்