• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு

September 26, 2016 தண்டோரா குழு

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது இளைஞர் ஒருவர் ஷூவை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. உ.பி.யில் ஆட்சியைப் பிடிக்கும் குறிக்கோளுடன் காங்கிரஸ் தீவிர பணியாற்றி வருகிறது.இதற்காக கடந்த சில நாட்களாக கிஷன் யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர் விவசாயிகள் மற்றும் ஏழைகளை சந்தித்து வருகிறார்.

அவர் இதுவரை 2,200 கி.மீ., தூரம் பயணித்துள்ளார். இன்று லக்னோவில் இருந்து 85 கி.மீ., தூரத்தில் உள்ள சீதாப்பூர் என்ற நகரில் திறந்தவெளி வேனில் யாத்திரை மேற்கொண்டார். அவர் பொதுமக்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவரை நோக்கி ஒரு வாலிபர் தனது ஷூவை வீசி எறிந்தார்.

இது குறித்து சீதாப்பூரில் ராகுல் காந்தி மீது ஷூ வீசிய நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க