• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாலியல் குறித்த புகார்களை விசாரிக்க தனி குழு

October 24, 2018 தண்டோரா குழு

பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க,மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 9 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பணியிடங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள்,சமூக வலைதளங்களில் #MeToo இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறிவருகின்றனர்.திரையுல பிரபலங்கள் தொடங்கி,பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.இதனையடுத்து,இதுகுறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என மத்திய அரசு சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. இதற்கிடையில்,மீடு புகாரில் மத்திய அமைச்சர் எம்.ஜே அக்பர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில்,பாலியல் புகார்கள் தொடர்பாக விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்தக் குழு பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்னைகள் தொடர்பாக புதிய சட்ட வரைவுகளைப் பரிந்துரைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,இந்த குழுவில்,மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன்,நிதின் கட்காரி,மேனகா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க