• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோடியின் பாசிச அணுகுமுறை தொடர்ந்தால் கிளர்ச்சியைத் தடுக்க முடியாது – சீதாராம் யெச்சூரி

November 19, 2016 தண்டோரா குழு

“மக்களைத் துயரத்தின் பிடியில் தள்ளிவிட்டுள்ள பிரதமர் மோடியின் பாசிசத் தனமான அணுகுமுறை தொடருமானால், அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால், கிளர்ச்சி வெடிப்பதைத் தடுக்க முடியாது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி எச்சரித்துள்ளார்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கண்டித்தும், கூட்டுறவு வங்கிகள் திட்டமிட்டு முடக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் திருவனந்தபுரத்தில் ரிசர்வ் வங்கி முன்பு வெள்ளியன்று மாபெரும் தர்ணாப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது;

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததற்கு காரணமாக பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்துள்ள கறுப்புப் பணம் உள்ளிட்ட எந்தப் பிரச்சினைக்கும் இந்த வழியில் தீர்வுகாண முடியாது.

தற்போதைய நிலையில், போதுமான அளவு புதிய ரூபாய் நோட்டுகள் இந்திய வங்கிகள் முழுவதும் சென்றடைந்து மக்களது கைகளுக்கு செல்லும் வரை பழைய ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பதுதான் சரியான வழி.

ஆனால், இதை மறுத்து இந்தியப் பொருளாதாரத்தையும், மக்களையும் துயரத்தின் பிடியில் தள்ளிவிட்டுள்ள பிரதமர் மோடியின் பாசிசத் தனமான அணுகுமுறை தொடருமானால், அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

பிரதமர் மோடி இது போன்ற நடவடிக்கைகளைக் கைவிடாவிட்டால் நாடு முழுவதும் மிகப் பெரும் கிளர்ச்சி வெடிப்பதைத் தடுக்க முடியாது என்றார்.

மேலும் படிக்க