June 21, 2019
தண்டோரா குழு
SDPI கட்சியின் 11 ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு ஜூன் 21 ந்தேதி கோவை மாவட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக கோவை அரசு ம௫த்துவமனையில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
SDPI கட்சியின் 11 ஆம் ஆண்டு துவக்க விழா இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதில் ஓ௫ பகுதியாக கோவை அரசு ம௫த்துவமனையில் SDPI கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர் மேலும் மத்திய மாவட்ட தலைவர் ராஜா உசேன் தலைமையில் பல்வேறு இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சிகள், மரம் நடுதல், மரங்கன்றுகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றன.
கோவை மாவட்ட SDPI கட்சியின் மருத்துவ துறையின் சேவை, அணியின் தலைவர் A.J.உசேன் அவர்களின் தலைமையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனையில் மருத்துவ உதவி, இரத்த தானம் வழங்குதல் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்து அவர்களுக்கு தேவையான உணவு, பழங்கள் வழங்கப்பட்டது, மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட sdpi கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், மருத்துவ சேவையில் அணி நிர்வாகிகள் ஏராளமான்னோர் கலந்து கண்டனர்.