September 3, 2018
த.விக்னேஷ்
நாம் நன்கு அறிந்த மற்றும் நம் வாழ்க்கையில் இன்று இந்த நிலைக்கு வர ஒரு முக்கிய காரணாமான பொருளை பற்றி,அது வேறு ஒன்றும் இல்லை,நாம் தினமும் பயன்படுத்தும் இப்போ அதிகம் பயன்படுத்தும் பென்சில் பற்றி தான்.பொதுவாக பென்சில்கள் பள்ளி குழந்தைகள் அதிகம் பயன்படுத்துவார்கள்.குழந்தைகளின் வெகுளித்தனம்,விளையாட்டு தன்மை போன்றவற்றை கருத்தில் கொண்டு,அவர்களுக்கு பிடித்த வகையிலும்,பென்சில் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது தான் இந்த பேப்பர் பென்சில்.
இதுகுறித்து பேப்பர் பென்சில் தயாரிக்கும் கோவையை சேர்ந்த ராம்மோகன் கூறுகையில்,
“இவ்வகையான பேப்பர் பென்சில்கள் மறுசுழற்சி செய்யப்படும் செய்தித்தாள் கொண்டு தயாரிக்கப்படுவதில்லை.இதனால் பள்ளி மாணவர்களுக்கு செய்திதாள் மையினால் பாதிப்பு ஏற்படுமோ என்று அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை.இந்த பேப்பர் பென்சில்கள் சாதாரண பேப்பர் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பேப்பர்,காகித கூல்,கரும்பு சக்கை போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படுவதால் தரம் வாய்ந்ததாக காணப்படுகிறது.
இவ்வகை பேப்பர் பென்சில்கள் பல்வேறு வண்ணங்களில்,விதவிதமான ஓவியங்கள்,வாக்கியங்கள் மற்றும் திருக்குறள்,ஆத்திச்சுடி,வாய்பாடுகள்,ABCD போன்றவை அச்சிடப்படுவதால் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும்,பேப்பர் பென்சில்கள் பொதுவாக நாம் பயம்படுத்தும் பென்சில்களின் எடையைக் காட்டிலும் சற்றுக் குறைவாக இருப்பதால் குழந்தைகள் பயன்படுத்த ஏதுவாக இருக்கிறது.பொதுவாக பென்சிலின் எடை 10 கிராம் ஆனால் பேப்பர் பென்சிலின் எடை 7 கிராம் மட்டுமே.
எளிதில் கையாளக்கூடிய இந்த வகையான பென்சில்களில் நமக்கு தேவையான வாக்கியங்கள்,திருக்குறள்,வாய்பாடு,ஆத்திச்சுடி,ABCD, போன்றவைகள் அச்சிடப்படுகிறது.இதுதவிர பல்வேறு நிகழ்ச்சிகள், திருமணங்கள்,பிறந்தநாள் கொண்டாட்டங்கள்,அலுவலக நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்வுகள்,விழிப்புணர்வு கூட்டங்கள்,போன்றவற்றில் இவ்வகையான பேப்பர் பென்சில்கள் பரிசாக அளிக்கப்படுகிறது.
மேலும்,அமெரிக்கா,சிங்கப்பூர்,மலேசியா,இலங்கை மற்றும் தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளுக்கும் இந்த வகையான பேப்பர் பென்சில்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.பென்சில்கள் செய்வதற்காக ஆயிரக்கணக்கான மரங்களும் இயற்கை வளங்களும் அழிக்கப்படுவதைத் தடுக்கிறது இந்த வகையான பேப்பர் பென்சில்கள்”. இவ்வாறு கூறினார்.
இந்த வகையான பேப்பர் பென்சில்களின் பயன்பாடு குறித்து பள்ளி ஆசிரியயை ஏஞ்சலின் ப்ரிசில்லா கூறுகையில்,
“மாணவர்கள் முதலில் கேட்டது “பேப்பர்ல பென்சிலா மிஸ்..? அப்படின்னு ஆச்சரியமா கேட்டாங்க”.பிறகு பேப்பர் பென்சிலில் இருக்கும் ஓவியங்கள், திருக்குறள், ஆத்திச்சுடி,வாய்பாடு ஆகியவை இடம்பெற்றுள்ளதை பார்த்து உற்சாகமடைந்தனர்.இதனால் மாணவர்கள் இப்பென்சிலை முழுவதும் பயன்படுத்துவதற்குள்ளாக பென்சிலில் அச்சிடப்பட்டிருக்கும் திருக்குறளையும்,வாய்ப்பாட்டையும் எளிதில் மனப்பாடம் செய்து விடுகிறார்கள்.இவ்வகை பென்சில்கள் மூலம் மாணவர்களின் படிப்பாற்றல் மற்றும் ஞாபகசக்தி அவர்களுக்கு அதிகமாகிறது.இப்பென்சிலின் எடை மிக குறைவாகவும்,நல்ல தரமுடனும் இருப்பதால்,மாணவர்கள் இதை எளிதில் கையாளக்கூடிய வகையில் இருக்கிறது.இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் இவ்வகை பென்சில்களையே அதிகம் பரிந்துரைக்கின்றனர்.இவ்வகை பேப்பர் பென்சில்கள் அனைத்து தரப்பு மாணவர்களும் வாங்ககூடிய விலையில் இருப்பதால் அனைவரும் வாங்கி பயன் பெறுகின்றனர்”.இவ்வாறு கூறினார்.