November 15, 2017
தண்டோரா குழு
சவூதியில் யோகாவை விளையாட்டின், ஒரு பிரிவாக அந்நாட்டு அரசு அங்கீகரித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, இந்தியாவின் பல இடங்களில் யோகாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், பண்டைய இந்தியாவின் யோகா கலையை சவூதி நாட்டின் விளையாடின் ஒரு பிரிவாக செவ்வாய்க்கிழமை(நவம்பர் 14) அங்கீகரித்துள்ளது.
சவூதி அரேபியாவின் வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகம் விளையாட்டு பட்டியலில் யோகாவை சேர்த்துள்ளது. இதன் மூலம், இஸ்லாமிய ராஜ்யத்தின் மக்கள் அரசாங்கத்திடமிருந்து உரிமம் பெறுவதன் மூலம் யோகாவை நடைமுறைப்படுத்த அனுமதிக்கிறது.
கடந்த 2015ம் ஆண்டு,ஜூன் மாதம் 21ம் தேதியை, சர்வதேச யோகா தினமாக ஐ.நா அறிவிக்கப்பட்ட பின்னர், சவூதி அரேபியாவிலுள்ள இந்திய தூதரக பணிகள் மூலம், அங்குள்ள இந்திய பள்ளிகளில் யோகா அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.