September 28, 2016
தண்டோரா குழு
கோவையில் கடந்த வாரம் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு திடீரென சிபிசிஐடிக்கு மாற்றப் பட்டுள்ளது.
கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளராக இருந்த சசிகுமார் கடந்த வார அவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதியில் பெரும் பதற்ற சூழல் நிலவியது. மேலும், அவரது இறுதி ஊர்வலத்தின் போது கடைகள், பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் தீக்கீரையாக்கப்பட்டன.
இதையடுத்து கொலையாளியை பிடிக்க டிஐஜி நாகராஜன் தலைமையில் 3 மாவட்ட சுப்பிரண்டுகள் அடங்கிய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், சசிக்குமார் கொலை வழக்கை திடீரென சிபிசிஐடிக்கு மாற்றி
டிஜிபி டி. கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.