• Download mobile app
19 Jan 2026, MondayEdition - 3631
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்வர் சுந்தரி ஆனார் ஒபாமாவின் இளைய மகள்

August 8, 2016 தண்டோரா குழு

பொதுவாகச் சிறுவர் சிறுமிகள் தங்கள் பள்ளியின் விடுமுறை நாட்களில் பெற்றோருடன் வெளியூர்களுக்குச் செல்வது ஏன் சிலர் வெளி நாடுகளுக்கும் கூட செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.சில பெற்றோர் அவர்கள் பிள்ளைகள் தங்கள் நேரத்தைச் சரியாக செலவிட வேண்டும் என்றும் கலைகளை கற்கவோ அல்லது சில பிரயோசமான வேலைகளைக் கற்றுக்கொள்ள அனுப்புகின்றனர்.

விடுமுறைக் காலங்களை பயனுள்ள முறையில் செலவிடும் வகையில், அமெரிக்க அதிபர் ஒபாமா தன் இளைய மகளைக் கடல் உணவு விற்கப்படும் பிரபல உணவகம் ஒன்றில் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் இளைய மகள் 15 வயது நிரம்பிய சாஷா என்னும் நடாஷாவிற்கு சமீபத்தில் தான் அவருடைய பள்ளியில் கோடை விடுமுறை விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரைக் கடல் உணவுகளை விற்பனை செய்யும் உணவகம் ஒன்றில் பணியில் சேர்த்து விட்டார் ஒபாமா.மற்ற ஊழியர்களைப் போலவே, அவரும் நீல நிற சீருடை அணிந்து வாடிக்கையாளர்களுக்குத் தேவையான உணவுகளை வழங்குவது, அவர்கள் சாப்பிட்டுச் சென்றதும் மேஜையைச் சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறார்.

அதோடு, வாடிக்கையர்களின் உணவிற்கு பில் போடுவது மற்றும் ஆர்டர் செய்யப்பட்டும் உணவுகளை எடுத்துச் சென்று காரில் அவர்களிடம் தருவது, உணவுப் பொருட்களை கேட்பவர்களுக்குக் கொண்டு சென்று பரிமாறுவது போன்ற பணிகளையும் அவர் செய்து வருகிறார்.
அதிபரின் மகள் என்பதால் ஆறு காவல் அதிகாரிகள் நடாஷாவின் பாதுகாப்பைக் கண்காணித்து, வேலை முடிந்ததும் அவரைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிபரின் மகளாக இருந்தாலும், தனது மகள் சாதாரண வாழ்க்கையின் அனுபவங்களைப் பெற வேண்டும் என்று பெற்றோர்களாக தாங்கள் விரும்புவதாக ஒபாமாவின் மனைவியும், நடாஷாவின் தாயுமான மிச்செல் ஒபாமா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க