ஒரு திரைப்படத்தை மிரட்டும் அளவுக்கு அரசு பலவீனமாக இருக்கிறதா என நடிகை வரலட்சுமி சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் சர்கார்.இப்படம் தீபாவளியன்று வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.இதற்கிடையில்,படத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான சில கருத்துகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதனால் படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன.
இந்நிலையில்,சர்கார் படத்திற்கு எதிராக பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில் இதுதொடர்பாக வரலட்சுமி சமூக வலைத்தளத்தில் தன் கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
அதில்,ஒரு திரைப்படத்தை மிரட்டும் அளவுக்கு அரசு பலவீனமாக இருக்கிறதா? பிரச்சினையை சரி செய்வதற்கு பதிலாக அதை மோசமாக்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.ஒரு படைப்பை உருவாக்க முழு சுதந்திரம் உள்ளது என பதிவிட்டுள்ளார்.மேலும்,இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸூக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாகவும் வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கோவையில் கிராப்ட் பஜார் 2025 துவக்கம்
கோவையில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சோகம்
கழிவுநீர் முதல் தொழிற்சாலை கழிவுகள் வரை அனைத்து வகையான மாசுபாட்டையும் கட்டுப்படுத்துவதற்கான தீர்வு: மேக் இந்தியா நிறுவனம் அறிவிப்பு
நவீன இரு சக்கர வாகன ஹேண்டில்பார் கட்டுப்பாட்டு கூறுகளுக்கான மூலோபாய தொழில் நுட்ப கூட்டணி – பிரிகோல் லிமிடெட் மற்றும் டோமினோ எஸ். ஆர். எல். நிறுவனங்கள் கூட்டாண்மை
கோவை அல்கமி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற அல்கமி இன்வெஸ்டிடியூச்சர் நிகழ்ச்சி
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தவெகவினர் மாலை அணிவித்து மரியாதை