• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சர்கார் பட விவகாரம் முன் ஜாமீன் கேட்டு ஏ.ஆர். முருகதாஸ் மனு

November 9, 2018 தண்டோரா குழு

சர்கார் பட சர்ச்சை விவகாரத்தில்,அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் சர்கார்.இப்படம் தீபாவளியன்று வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.இதற்கிடையில்,படத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான சில கருத்துகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுகவை மறைமுகமாக சாடும் விதமாக நிறைய வசனங்கள் காட்சிகள் மற்றும் அதிமுகவின் திட்டங்கள் குறித்தும்,அதிமுக தலைவர்களின் பெயரை மறைமுகமாக குறிப்பிடும் வகையிலும் சில காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து,தமிழகம் முழுக்க சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சில இடங்களில் திரையங்கிகளில் வைப்பட்டுள்ள விஜயின் பேனர்களை அதிமுக தொண்டர்கள் கிழித்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே நேற்று நள்ளிரவு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய அவரது வீட்டுக்குக் காவல்துறை விரைந்துள்ளது என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.மேலும்,முருகதாஸ் வீட்டில் இல்லாததைத் தெரிந்துகொண்ட போலீஸ் சென்று விட்டனர் என்றும் தெரிவித்திருந்தது.

ஆனால்,வழக்கமான ரோந்துப் பணிக்காகவே அவரது வீட்டின் அருகே சென்றோம்.கைது செய்வதற்காக அல்ல என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று காலை சர்கார் பட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதை ஏற்ற நீதிபதி இன்று பிற்பகல் இந்த வழக்கு விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க