• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை கைது செய்ய நவம்பர் 27 வரை தடை – சென்னை உயர்நீதிமன்றம்

November 9, 2018 தண்டோரா குழு

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை நவம்பர் 27-ம் தேதி வரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் சர்கார்.இப்படம் தீபாவளியன்று வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.இதற்கிடையில்,படத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான சில கருத்துகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுகவை மறைமுகமாக சாடும் விதமாக நிறைய வசனங்கள் காட்சிகள் மற்றும் அதிமுகவின் திட்டங்கள் குறித்தும்,அதிமுக தலைவர்களின் பெயரை மறைமுகமாக குறிப்பிடும் வகையிலும் சில காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து,தமிழகம் முழுக்க சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சில இடங்களில் திரையங்கிகளில் வைப்பட்டுள்ள விஜய்யின் பேனர்களை அதிமுக தொண்டர்கள் கிழித்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே நேற்று நள்ளிரவு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய அவரது வீட்டுக்குக் காவல்துறை விரைந்துள்ளது என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

மேலும்,முருகதாஸ் வீட்டில் இல்லாததைத் தெரிந்துகொண்ட போலீஸ் சென்று விட்டனர் என்றும்
தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் இன்று காலை சர்கார் பட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில்,தணிக்கை சான்று தந்த பின் ஒரு படத்தில் காட்சிகளை ஆளுங்கட்சியினர் நீக்க சொல்வது சட்டவிரோதமானது.சர்கார் படத்தினை பார்த்து பொதுமக்களோ, அரசுக்கு எதிரான போராளிகளோ போராடவில்லை.மேலும் அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் எண்ணத்தில் சர்காரை உருவாக்கவில்லை என்றும் முருகதாஸ் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்,இன்று பிற்பகல் நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்,இந்தப் படத்தில் அரசு வழங்கிய இலவசப் பொருள்கள் எரிக்கப்பட்டுள்ளதாகவும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பின்னர்,வாதிட்ட முருகதாஸ் தரப்பு வழக்கறிஞர்,சர்ச்சையான காட்சியாக கூறப்பட்டவற்றை நீக்கி விட்டதாக கூறினார்.

இரு தரப்பையும் விசாரித்த நீதிபதி,இது வெறும் சினிமா மட்டுமே.இதை சினிமாவாகவே பார்க்க வேண்டும்.சர்கார் படத்துக்கு தணிக்கை சான்றிதழும் வழங்கப்பட்டுவிட்டது.இப்போது எப்படி பிரச்னை செய்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் அதில் மிக்ஸி கிரைண்டர் போன்றவற்றுடன் டி.வியையும் எரித்திருந்தால் உங்களுக்கு மகிழ்ச்சியா என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.மேலும்,சர்கார் பட போஸ்டர்களை கிழித்தவர்களில் எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தியவர்கள் மீது எத்தனை வழக்குகள் போடப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார்.இதையடுத்து,இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை நவம்பர் 27-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் படிக்க