• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கடந்த நிதியாண்டில் அரசு வங்கிகளுக்கு ரூ.17,993 கோடி நஷ்டம் – சந்தோஷ்குமார் கங்வார்

December 5, 2016 தண்டோரா குழு

அரசுடைமை வங்கிகள் கடந்த நிதி ஆண்டில் ரூ. 17,993 கோடி நஷ்டம் அடைந்ததாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோ குமார் கங்வார் தெரிவித்தார்.

மக்களவையில் குளிர்கால கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 2015-16-ம் நிதி ஆண்டு அரசுடைமை வங்கிகளின் நிலை குறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோ குமார் கூறியிருப்பதாவது:

28 அரசு வங்கிகள் 2015-16-ம் நிதி ஆண்டில் எதிர்கொண்ட நஷ்டம் ரூ.17,993 கோடி. இவற்றில் 14 வங்கிகள் நிகர நஷ்டத்தை அடைந்துள்ளன. மற்றவை ஓரளவு லாபம் ஈட்டியுள்ளன.

பாங்க் ஆப் இந்தியா எதிர்கொண்ட நஷ்டம் ரூ. 6,089 கோடியாகும். பாங்க் ஆப் பரோடா ரூ. 5,396 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ. 3,974 கோடி, ஐடிபிஐ வங்கி ரூ. 3,665 கோடி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் ரூ. 2,897 கோடி, யூகோ வங்கி ரூ. 2,799 கோடி, சிண்டிகேட் வங்கி ரூ. 1,643 கோடி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ரூ.1,418 கோடி நஷ்டம் அடைந்துள்ளன.

வாராக் கடனுக்காக வங்கிகள் கூடுதல் தொகையை ஒதுக்கியதால் நஷ்டம் அடைந்தது.
இருப்பினும் கடன்களை வசூலிப்பதில் வங்கிகள் முனைப்பு காட்டி வருகின்றன. அடுத்த சில காலாண்டுகளில் வங்கிகள் லாபம் ஈட்டத் தொடங்கும். கடந்த நிதி ஆண்டில் லாபம் ஈட்டிய வங்கிகள் பட்டியலில் எஸ்பிஐ ரூ. 9,951 கோடி, ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் ரூ. 1,065 கோடி, ஸ்டேட பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர் ரூ. 851 கோடி, ஆந்திர வங்கி ரூ. 540 கோடி லாபம் ஈட்டியதாக அவர் தெரிவித்தார்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் அரசு வங்கிகளின் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக ரூ. 70 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திர தனுஷ் என்ற பெயரிலான இத்திட்டம் 2018-19-ம் நிதி ஆண்டு வரை தொடரும்.இவ்வாறு சந்தோஷ் கங்வார் கூறினார்.

மேலும் படிக்க