• Download mobile app
10 Mar 2026, TuesdayEdition - 3681
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினிக்கு ரோஷம் வர உப்பு அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்

September 16, 2016 தண்டோரா குழு

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு எந்த எதிர்ப்பு குரலும் கொடுக்காத ரஜினிக்கு ரோஷம் வர கோவையில் இந்து மக்கள் கட்சியினர் உப்பு அனுப்பினர்.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து இன்று பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய வணிக சங்கத்தினர் ரயில் மறியல், முற்றுகை போராட்டங்களில் ஈடுப்பட்டுவருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையத்தில் உள்ள அஞ்சலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் நடிகர் ரஜினிகாந்திற்கு ரோஷம் வர உப்பு அனுப்பினர்.

இதற்கு தலைமை தாங்கி செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில துணை தலைவர் கோவிந்தராஜ், கர்நாடகவில் இருந்து வந்து தமிழகத்தில் சூப்பர் ஸ்டாராக வாழும் ரஜினிகாந்த், “உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் ” என்று திரைப்படங்களில் பாடும் அவர் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு எந்த எதிர்ப்பு குரலும் கொடுக்கவில்லை.

இதற்காக ரஜினிக்கு ரோஷம் வர வேண்டும் என்பதற்காகவே உப்பு அனுப்புகிறோம் என்றும் அவரோடு சேர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கும் அனுப்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க