• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பண மோசடியில் ஈடுபடுவோர் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது – சக்தி காந்த்தாஸ்

December 2, 2016 தண்டோரா குழு

பண மோசடியில் ஈடுபடுபவர்கள், கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுபவர்கள் யாரும் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது என மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த்தாஸ் எச்சரித்துள்ளார்.

கறுப்புப் பணம் பதுக்கியவர்களுக்கு 85 சதவீதம் வரை அபராதம் விதிக்கும் வகையில் மக்களவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கறுப்புப் பணம் பதுக்கி வைத்துள்ளவர்கள், அப்பாவி மக்களைப் பயன்படுத்தி அதனை வெள்ளையாக மாற்றி வருவதாக புகார்கள் எழுந்தன.

மத்திய அரசு ஏழை, எளிய மக்களுக்குக்காகத் தொடங்கிய ஜன்தன் வங்கிக் கணக்குகளில் கறுப்புப் பணத்தைச் செலுத்தி அதனை வெள்ளையாக்கும் முயற்சிகளும் நடந்தன. கிராம மக்கள் இதுபோன்ற மோசடியாட்களிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க ஜன்தன் வங்கிக் கணக்கிளிலிருந்து மாதம் ரூ.10,000 மட்டுமே எடுக்க முடியும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில் கறுப்புரி பணத்தை வெள்ளையாக மாற்றுபவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த் தாஸ் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது;

பண மோசடியில் ஈடுபடுபவர்கள், கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுபவர்கள் யாரும் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது. இது தொடர்பாக சிலர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பலன்கள் தற்போது தெரிய வருகின்றன. இனி வரும் காலங்களில் இது இன்னும் தெளிவாகிவிடும்” என்றார்.

மேலும் படிக்க