October 9, 2018
தண்டோரா குழு
சபரிமலையில் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் தொடரப்பட்ட மறுசீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுத்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள்,10 முதல் 55 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.மிக நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கத்தை எதிர்த்து,இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கை ஆரம்பத்தில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது.பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி,5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.இந்நிலையில் இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த இவ்வழக்கின் விசாரணை முடிந்து கடந்த அக்டோபர் மாதம்28ம் தேதியன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
பெண்களை கடவுகளாக வழிபடும் நாட்டில் சில கோயில்களில் தடை விதிப்பது சரியல்ல.ஐயப்ப பக்தர்கள் அனைவரும் இந்துக்கள்.தெய்வ வழிபாட்டில் பாரபட்சம் கூடாது.கடவுளை வணங்குவதில் ஆண் – பெண் என்ற பாகுபாடு இருக்க கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.மேலும்,வழிபாடு என்பது ஆண் – பெண் இருவருக்கும் சமமானது என்று கூறி 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்ல தேவஸ்தானம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது.
இந்நிலையில் இதுதொடர்பாக கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை எனவும்,தீர்ப்பை முழு மனதுடன் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
மேலும்,சபரிமலை கோயிலுக்கு செல்லும் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்.சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அதுபோலவே சபரிமலை கோயிலுக்கு பெண்கள் வந்து செல்ல தேவையான வசதிகள் செய்துத்தரப்படும்.இதுதொடர்பாக கோயில் நிர்வாகத்துக்கு ஏற்கெனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றுக் கூறியிருந்தார்.
இந்நிலையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை எதித்து தேசிய அய்யப்ப பக்தர்கள் சங்க தலைவர் சைலஜா விஜயன் சார்பில் நேற்று மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டதோடு இவ்வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கவும் அம்மனுவில் குறிப்பிடிருந்தார்.ஆனால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம்,வழக்கமான நடைமுறையிலேயே இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.