September 29, 2018
தண்டோரா குழு
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழையலாம் என்ற தீர்ப்பு பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதை அறிய முடிகின்றது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை ரயில்நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“சபரிமலை அய்யப்பன் கோவில் வழிபாட்டு முறைகள் பாரம்பரியமாக அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.ஆனால் இந்த தீர்ப்பு அந்த ஆலயத்தில் உள்ள பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதை அறிய முடிகின்றது.தேவசம்போர்டு மேல்முறையீடு செய்ய முடிவு செய்து இருப்பதாக அறிகின்றேன்.
பாரம்பரியம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கின்றது.இந்த விவகாரத்தில் மத்திய அரசு முடிவு செய்ய எதுவுமில்லை எனவும்,மாநில அரசுதான் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பா.ஜ.க வை மையப்படுத்தியே அனைத்து அரசியலும் நடைபெற்று கொண்டுள்ளது எனவும்,இதை அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்ந்து இருக்கின்றனர்.பா.ஜ.க தமிழக அரசியலில் மையப்புள்ளியாக இருந்து வருகின்றது.
அதிமுகவினர் திமுக பின்னணியில் பா.ஜ.க இருக்கின்றது என சொல்வதாகவும்,திமுகவினர் அதிமுக பின்னணியில் பா.ஜ.க இருக்கின்றது என சொல்வதாகவும் கூறிய அவர்,நாங்கள் எந்த கட்சிக்கும் பின்னால் இருந்து செயல்பட வில்லை,அனைவருக்கும் முன்னோடியாக இருந்து வருகின்றோம் என தெரிவித்தார்.
மேலும்,அடுத்த ஆண்டு வரும் தேர்தல் ஜூரம் காரணமாக ரபேல் ஊழல் குற்றச்சாட்டு பெரிதுப்படுத்த படுவதாகவும், ரபேல் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக துறை அமைச்சர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர் என தெரிவித்தார்”.இவ்வாறு பேசினார்.