• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளில் ரூ. 13 கோடிக்கு மேல் பறிமுதல்

November 16, 2016 தண்டோரா குழு

தேர்தல் நடக்கும் 3 தொகுதிகளில் ரூ.13.69 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் நவம்பர் 18ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தல் களத்தில் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக என பல முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

தேர்தல் அதிகாரியாக மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டு, பணப்பட்டுவாடாவைத் தடுக்க இரவு பகலாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பல்வேறு சோதனைகளை அடுத்து, கணக்கில் வராத பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளார்களிடம் அவர் பேசியதாவது;

அரவக்குறிச்சியில் ரூ. 45 லட்சமும், தஞ்சாவூரில் ரூ. 9.14 லட்சமும், திருப்பரங்குன்றத்தில் ரூ. 4.09 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூரில் 2 சிறப்புப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரவக்குறிச்சியில் 4 சிறப்பு தேர்தல் பார்வையாளர்களும், தஞ்சாவூரில் 3 சிறப்பு பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட நவம்பர் 19 ம் தேதி மாலை 5.30 மணி வரை தடை விதிக்கப்படுகிறது.

நவம்பர் 19-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிடக்கூடாது. வாக்காளர் அல்லாதோர், வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் தொகுதிகளை விட்டு வெளியேற வேண்டும்.

இவ்வாறு லக்கானி கூறினார்.

மேலும் படிக்க