December 7, 2017
தண்டோரா குழு
அதிமுக பொதுச் செயலாளர் கையெழுத்து இல்லாததால் ஆர்.கே. நகரில் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என டிடிவி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதிமுக சார்பில் ஆர்.கே நகர் இடைதேர்தலில் மதுசூதனன் போட்டியிடவுள்ளார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் அதிகாரியும் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், இன்று ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கியது.
அப்போது, அரசியல் கட்சி வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கும் படிவத்தில் பொதுச் செயலாளர் மட்டுமே கையெழுத்திட வேண்டும். ஆனால், மதுசூதனன் தாக்கல் செய்த வேட்பு மனுவில் ‘பி’ படிவத்தில் அதிமுக பொதுச் செயலாளர் கையெழுத்து இல்லாததால்,மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது எனவும் தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.