December 9, 2017
தண்டோரா குழு
ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமியை மாற்றியது வரவேற்கத்தக்கது என்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை மாற்றக்கோரி தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து திமுக சார்பில் கோரிக்கை மனு அளித்தோம்.இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை மாற்றக்கோரி திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில், புதிய தேர்தல் அதிகாரியாக பிரவீன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளது வரவேற்கதக்கது.
மேலும்,ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்தல் ஆணையம் விழிப்புடன் செயல்பட்டு ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த வேண்டும்.