January 23, 2018
தண்டோரா குழு
நடிகர் விஷால் ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், கையெழுத்து குளறுபடி காரணமாக விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
வேட்புமனு தாக்கலின் போது விஷாலை சிலர் முன்மொழிந்ததாக கூறியிருந்தனர். ஆனால், தன்னை முன்மொழிந்தவர்களை சிலர் மிரட்டுவதாக நடிகர் விஷால் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், நடிகர் விஷாலை முன்மொழிந்த தீபக், சுமதி மிரட்டப்பட்டனரா⁉ என விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிரட்டியது தொடர்பான முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.