• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விரைவில் புதிய ரூ.100 நோட்டுகள் – இந்திய ரிசர்வ் வங்கி

December 7, 2016 தண்டோரா குழு

பழைய 1௦௦ ரூபாய் நோட்டுகளுடனேயே புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் புழக்கத்தில் விடப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

புதிய ரூ.100 நோட்டுகளை விரைவில் புழக்கத்தில் விடுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பழைய ரூபாய் நோட்டுகளில் இருப்பதைப் போலவே புதிய ரூ.100 நோட்டுகளிலும் மகாத்மா காந்தியின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருக்கும்.

அதே போல், நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டாக குறிப்பிடப்பட்டிருக்கும் 2016 என்ற எண் வரிசையும், பழைய நோட்டுகளில் இருக்கும் எண்களின் அளவையே ஒத்திருக்கும்.

அதே நேரத்தில், புதிய நோட்டுகளில் அச்சிடப்பட்டிருக்கும் மற்ற எண்களும், அடையாளக் குறியீடுகளும் சற்று பெரிய அளவில் குறிக்கப்பட்டிருக்கும். இந்த நோட்டுகளில் வரிசைக் கோடுகள் ஏதும் இடம்பெற்றிருக்காது.பழைய ரூபாய் நோட்டுகளுடனேயே இந்த புதிய ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் விடப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க