• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியா சகிப்புத்தன்மையின் பல்கலைக்கழகமாக விளங்குகிறது – ராஜ்நாத் சிங்

October 14, 2016 தண்டோரா குழு

டெல்லியில் இந்திய கிறிஸ்தவ சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராஜ்நாத் சிங் இந்தியா சகிப்புத்தன்மையின் பல்கலைக்கழகமாக விளங்குகிறது என தெரிவித்தார்.

இதுகுறித்து ராஜ்நாத் சிங் பேசியதாவது,

அனைத்து மதத்தை சார்ந்த மக்களும் இந்தியாவில் எந்த பிரச்சனையும் இன்றி நிம்மதியாக வாழ்கின்றனர். எந்த பாகுபடும் அச்சமும் இன்றி தங்கள் விரும்பிய மதத்தை மக்கள் வழிபடுகின்றனர். இதன் காரணமாகவே இந்தியா சகிப்புத்தன்மையின் பல்கலைக்கழகமாக விளங்குகிறது என கூறினார்.

மேலும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் கிறிஸ்தவ மதம் வந்துவிட்டது. உலகின் மிகப்பழமையான தேவாலயங்களில் ஒன்றான செயிண்ட் தாமஸ் ஆலயம் கேரளாவில் தான் உள்ளது. கிறிஸ்தவர்களின் பங்களிப்பை இந்தியா ஒரு போதும் மறக்காது. செயிண்ட் தாமஸ் முதல் அன்னை தெரசா வரை அனைவரும் சமூகத்தில் இருந்து தீமைகளை அகற்ற பாடுபட்டனர் எனவும் இந்தியாவில் மத அடக்குமுறைகளுக்கு ஒரு போதும் அனுமதி அளிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.

பின்னர் பாகிஸ்தானை விமர்சித்து பேசிய அவர் இந்தியா மத சார்பற்ற நாடு என்ற நிலையை தேர்ந்தெடுத்த போது, பாகிஸ்தான் தன்னைத்தானே மத சார்பு நாடாக அறிவித்துக்கொண்டது. ஆனால் தற்போது பயங்கரவாதத்தை தனது கொள்கையாக அந்த நாடு பின்பற்றி வருகிறது என குற்றம்சாட்டினர்.

மேலும் சில நாடுகள் பயங்கரவாதத்தை தங்கள் கொள்கைகளாக பின்பற்றுவது துரதிருஷ்டவசமானது. பயங்கரவாதத்துக்கு எந்த மதமும் கிடையாது. பயங்கரவாதத்தால் இந்தியா மட்டுமால்லாமல் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என கூறினார்.

மேலும் படிக்க