• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஹானாவை சஸ்பெண்ட்செய்த பி.எஸ்.என்.எல் நிறுவனம்

November 28, 2018 தண்டோரா குழு

சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்ற பெண் ஆர்வலர் ரஹானாவை பி.எஸ்.என்.எல் நிறுவனம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதற்கடையில்,கடந்த அக்டோபரில் கோவில் சிறப்பு பூஜைக்காக திறக்கப்பட்ட போது பெண் ஆர்வலர் ரெஹானா பாத்திமா உட்பட 8-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவிலுக்கு செல்ல முயற்சி செய்தார்கள்.

ஆனால், பக்தர்கள் தந்திரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து,அவர்களைக் கீழே இறக்கக் கேரள அரசு உத்தரவிட்டது.இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து,பெண் ஆர்வலர் ரெஹானா பாத்திமாவிற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கொச்சியில் உள்ள போட் ரெட்டி பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கிளையில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றி வரும் ரெஹானா பாத்திமா பழரவிட்டம் நகரில் உள்ள கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கிடையில்,சமீபத்தில் தனது ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில்,மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ரெஹானா பாத்திமாக எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து,நேற்று நண்பகல் 1 மணிக்கு பழவிரட்டம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கிளைக்குச் சென்ற போலீஸார் ரெஹானா பாத்திமாவை கைது செய்தனர்.இந்நிலையில்,அவர் வேலை செய்து வந்த பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரஹானாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க