• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆண்கள் நடித்தால் அது ஆபாச காட்சி இல்லையா ?கபாலி நடிகைக்காகக் குரல் கொடுத்த சக நடிகர்

August 17, 2016 தண்டோரா குழு

கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தேவின் செக்ஸ் காட்சிகள் என்ற பெயரில் கடந்த சில நாட்களாகச் சமூக வலைத்தளங்களில் வெளியான இரு காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த பார்ச்டு படத்தில் நடிகை ராதிகா ஆப்தே மற்றும் அதில் ஹுசைனி ஆகியோர் நடித்திருந்தனர். சமீபத்தில் இப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியாகின.

அதில் ராதிகா ஆப்தேவுடன் நடிகர் அதில் ஹுசைனி நிர்வாணமாக நடித்திருந்தது போல் காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தது. ஆனால் சமூக வலைத்தளங்களிலும், இணையத்திலும் ராதிகா ஆப்தேவின் செக்ஸ் காட்சி என்ற பெயரில் தான் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

இதையடுத்து ராதிகா ஆப்தேவுடன் நடித்திருந்த அதில் ஹுசைன், ராதிகா ஆப்தே செக்ஸ் காட்சிகள் என இணையத்தில் வெளியான காட்சிகள் அழைக்கப்படுவதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதில் ஹுசைன் கூறும் போது,

இணையத்தில் வெளியான காட்சிகளையெல்லாம் ராதிகா ஆப்தே செக்ஸ் வீடியோ எனக் கூறினார்களே தவிர, யாருமே அதில் ஹுசைன் செக்ஸ் வீடியோ எனக் கூறவில்லை. ஒரு ஆண் எது செய்தாலும் அது பெரிய விஷயமே இல்லை.

ஆனால் அதுவே ஒரு பெண் எந்த ஒரு சிறு விஷயம் செய்தாலும், அது பூதாகரமாக்கப்படுகிறது. அதனால் தான் செக்ஸ் காட்சி என அதற்குப் பெயரும் வைக்கப்படுகிறது எனக் கூறியுள்ளார்.

மேலும், நாம் எவ்வளவு மோசமான ஆணாதிக்க சமூகத்தில் வாழ்கிறோம் என்பதற்கான எடுத்துக்காட்டு இது என்றும் வெளிநாட்டுப் படங்களில் இது போன்ற காட்சிகள் இடம் பெறுவது இயல்பு தான்.

ஆனால் நம்நாட்டில் மட்டும் இதை ஏன் இத்தனை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள் எனத் தெரியவில்லை எனவும் அதில் ஹுசைன் கொந்தளித்துள்ளார்.

நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் அசீம் பாலாஜி ஆகியோர் தயாரித்துள்ள இப்படம் உலகின் பல்வேறு திரைப்பட விழாவில் கௌரவிக்கப்பட்டது.குஜராத்தின் கிராமப்புறத்தில் வாழும் நான்கு சாதாரண பெண்களைச் சுற்று நிகழும் சம்பவங்களே இந்தத் திரைப்படத்தின் கதையாகும்.

மேலும் படிக்க