September 29, 2018
தண்டோரா குழு
இந்து மதத்தையும்,இந்து மத கோவில்களையும் பற்றி தரக்குறைவாக பேசி வரும் மோகன் சி லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராஷ்டிரிய சனாதன சேவா சங்கத்தினர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் இன்று புகார் மனு அளித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் மோகன் சி லாசரஸ் என்ற நபர் இந்து மதத்தை பற்றியும்,இந்து மத கோவில்கள் பற்றியும்,காஞ்சி மடத்தை பற்றியும் இழிவான வகையில் பேசியதாக கூறப்படுகிறது.இவர் பேசியது சமூக வளைதளங்களில் பகிரப்பட்டும் வருகிறது.இதனால் சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராஷ்டிரிய சனாதன சேவா சங்கத்தினர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர்.மேலும்,தேவையற்ற இன மோதல்களை தூண்டும் வகையில் பேசி வரும் இந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.