• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுதந்திரத்திற்காக ஆர்.எஸ்.எஸ் எதுவும் செய்யவில்லை நடிகை ரம்யா காமெடிப் பேச்சு

September 1, 2016 தண்டோரா குழு

இந்திய சுதந்திரத்திற்காக ஆர்.எஸ்.எஸ் எந்த பங்களிப்பும் செய்யவில்லை என்றும்,ஆங்கிலேயர்களின் பக்கம் இருந்து செயல்பட்டதாகவும் முன்னாள் எம்.பியும் நடிகையுமான ரம்யா தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான ரம்யா,அண்மையில் அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியது போன்று பாகிஸ்தான் நரக தேசம் அல்ல.நல்ல நாடாகவே இருக்கிறது என்று கூறியிருந்தார்.இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும்,வழக்கறிஞர் ஒருவர்,ரம்யா மீது தேசதுரோக வழக்கும் தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில்,நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரம்யா,சுதந்திரப் போராட்டத்தின் போது, ஆர்.எஸ்.எஸ். ஆங்கிலேயர்களுடன் கை கோர்த்திருந்ததாகவும்,காங்கிரஸ்,மட்டுமே போராடியதாகவும் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய பா.ஜ.க வினர், ரம்யா விளம்பரத்திற்காகப் பேசுவதையும்,வரலாறு தெரியாமல் பேசுவதையும் விட்டுவிட்டு வேறு வேலை இருந்தால் பார்க்கவேண்டும் எனக் கூறியுள்ளனர்.மேலும் ஆர்.எஸ்.எஸ் என்பதே சுதந்திரத்திற்குப் பின் உருவான அமைப்பு, அவர்கள் எப்படி ஆங்கிலேயர்களுக்குச் சாதகமாக நடந்திருக்க முடியும், இது சிறுபிள்ளைத்தனமானது எனக் கிண்டலடித்துள்ளனர்.

அதே சமயம்,கர்நாடக கட்சியினர்,சமீபகாலமாகக் கட்சியிலும்,பொதுமக்களிடமும் தன்னுடைய செல்வாக்கு சரிந்து வருவதை மீட்டெடுக்கவே இது போன்ற லாஜிக் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் எனக் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க