August 22, 2018
தண்டோரா குழு
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வென்று 2-0 என முன்னிலை வகிக்கின்றது.இதனையடுத்து நாட்டிங்காம்மில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில்,வெற்றி பெற்ற இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில், “இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணிக்கு வாழ்த்துகள்.இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளதால் தொடரை வெல்லும் வாய்ப்பு உள்ளது.முயலுங்கள்,விராட் கோலி” எனக் கூறியுள்ளார்.