• Download mobile app
20 Oct 2025, MondayEdition - 3540
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாக்கில் நடந்ததை விளக்கினார் ராஜ்நாத் சிங்

August 5, 2016 தண்டோரா குழு

பாகிஸ்தானில் நடைபெற்ற சார்க் மாநாட்டின் போது இந்திய செய்தியாளர்களை அனுமதிக்காமல் தமது பேச்சு இருட்டடிப்பு செய்யப்பட்டு, அவமதிக்கப்பட்டது உண்மை தான் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் தமது பாகிஸ்தான் பயணம் குறித்து அறிக்கை மீது உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளுக்குப் பதிலளித்து பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டின் மரியாதையைக் காக்கும் வகையில் தாம் விருந்தைப் புறக்கணித்ததாக குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர் இந்தியாவின் தொலைக்காட்சி சேனல்களான தூர்தர்ஷன், ஏ.என்.ஐ, பி.டி.ஐ உள்ளிட்டவற்றின் செய்தியாளர்கள் தமது பேச்சைப் பதிவு செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றார்.

இதன் மூலம் பாகிஸ்தான் தமது பேச்சை இருட்டடிப்பு செய்துவிட்டதாக குறிப்பிட்டார்.பாகிஸ்தான் என்ன செய்ய நினைத்ததோ அதைச் செய்தது. தாம் அதைப்பற்றி எதுவும் கூற விரும்பவில்லை என்றார். சார்க் உறுப்பு நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் கூட்டம் முடிந்ததும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தம்மை விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்து விட்டு, பின்னர் உடனே அவர் காரில் ஏறிச் சென்று விட்டதாக ராஜ்நாத் கூறினார்.

அதே சமயம் நாட்டின் பெருமையை பாதுகாக்க வேண்டியது முக்கியம் என்று தாம் உணர்ந்திருந்ததாகத் தெரிவித்த ராஜ்நாத், இந்தியாவின் மானத்தைக் காக்க பாகிஸ்தான் அளித்த மதிய விருந்திற்குச் செல்லாமல் புறக்கணித்ததாகத் தெரிவித்தார்.முன்னதாக ராஜ்நாத் சிங் தனது அறிக்கையில் தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெரிவித்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ், பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் பாகிஸ்தானை கண்டித்தனர். பாகிஸ்தானில் என்ன நடந்தது என்பதை நாட்டுக்குத் தெரிவிக்குமாறு அவர்கள் வலியுறுத்தியதை அடுத்து மக்களவையிலும் ராஜ்நாத் சிங் தமது அறிக்கையை அளித்தார்.

மேலும் படிக்க